

மலேசியாவில் முதன்முறையாக, சத்குருவுடன் தமிழ் மஹாசத்சங்கம்.
சத்குருவுடன் மஹாசத்சங்கம்
சத்குருவை நீங்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும் சரி, அல்லது முதன்முறையாக அவரை உணர வந்திருந்தாலும் சரி — வாழ்க்கையை ஒரு ஆழமான பரிமாணத்திலிருந்து நோக்குவதற்கான வாய்ப்பை வழங்கும், தமிழில் நடைபெறும் மஹாசத்சங்கத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
முற்றிலும் தமிழில் நடைபெறும் இந்தச் சிறப்புச் சத்சங்கம், கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்துள்ள மொழியில், சத்குருவின் சுவாரஸ்யமான உரையாடல்களையும் ஞானத்தையும் கேட்கவும், சிந்திக்கவும், உணர்ந்து அனுபவிக்கவும் ஒரு நெருக்கமான வாய்ப்பை அளிக்கிறது.
வெறும் அவரது முன்னிலையிலேயே (Presence) ஆயிரக்கணக்கானோரை சக்திவாய்ந்த அனுபவங்களில் திளைக்கச் செய்யக்கூடிய ஒரு குருவை, இந்தச் சத்சங்கம் ஒரு வாயிலாக (Doorway) இருந்து, உடல் நிலையைத் தாண்டி உணர்வதற்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.